Google
 
Web google.com

Sunday, February 19, 2006

பஸ்சில் போய்க்கொண்டு இருந்தபோது நடந்த சம்பவம் ஒண்டு.
வகுப்பு முடிந்து வந்த பல பெண்பிள்ளையள் அடுத்த தரிப்பில் ஏறினார்கள்.
அவர்களோடு ஒரு மைனர் குஞ்சு ஒருத்தரும் ஏறினார்.
கையில செல்போன், கழுத்தில இரட்டை சங்கிலி,நீட்டு முடி, சேட்டில கூலிங் கிளாஸ் மாட்டி கொண்டு நிக்கிறார்.
நிண்ட பிள்ளையள எல்லாம் திரும்பி திரும்பி பார்த்தார். அவையள் யாரும் அவரை கணக்கில எடுக்காமல் நிக்கினம்.
இருக்க இடமில்லாமல் நிண்டு கொண்டு வந்த பிள்ளையளுக்கு முன்னால போய் நிண்டவர் தன்ர செல்போன எடுத்து நம்பர் டயல் பண்ணினார். காதுக்க வச்சு கதைக்க வெளிக்கிட்டார்.''ஹலோ, மச்சான் நான் பஸ்சில வந்து கொண்டு இருக்கிறன். கார் பிரேக் டவுண் ஆகிட்டுது......''அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவரின்ட செல்போன் றிங் பண்ண தொடங்கியது.

(அவர் கோல் பண்ணி கதைத்துக்கொண்டு இருக்கும் போதே அவரின்ட போனுக்கு கோல் வருது.அது றிங்கும் பண்ணுது அப்பிடி ஒரு செல்போன்!!!!!!! எங்கயாவது கிடைச்சா எனக்கும் சொல்லுங்கோ....)

பஸ்சிற்குள் ஒரே சிரிப்பு.... எல்லோரும் அவரையே பார்க்கினம் சட்டென பதறியவர் அப்படியே வாசலுக்கு ஓடினார். யாரையும் நிமிர்ந்து, திரும்பி பார்க்கிரார் இல்ல. அவரின் கஸ்டகாலம் அடுத்த தரிப்புக்கு இன்னும் கொஞ்ச தூரம் கிடக்கு. பஸ்சுக்குள் சிரிப்பு இன்னும் ஓயவில்லை.
அப்பிடியே தலையை குனிந்து கொண்டு நிண்டவர் பஸ் அடுத்த தரிப்பில் நிப்பாட்ட முதலே குதித்து ஓடிட்டார்.பந்தா காட்ட வெளிக்கிட்டு மூக்கு உடைபட்டதுதான் மிச்சம்.இது தேவையா? எல்லாம் வயசுக்கோளாறு.................ம்ம்ம்ம்ம்ம்.......
அவரை அதுக்கு பிறகு அந்த பஸ்சில் காணேல்ல. பிள்ளையள் இனி தொல்லை இல்லாமல் போய் வருங்கள்.

1 Comments:

At 1:28 AM, Anonymous Anonymous said...

மைனர் குஞ்சு??? அப்பிடின்னா என்னா?

 

Post a Comment

<< Home