Google
 
Web google.com

Friday, February 24, 2006

''உன்னை அதிகமாக நேசிப்பவர்கள் தான், உன்னை அதிகமாக காயப்படுத்துவார்கள்.
நீ காயப்படும்போது, அதற்காக அதிகமாக துடிப்பவர்களும் அவர்களே''

நண்பரின் வீட்டுக்குத் தினசரி வந்து அவரின் மனைவிக்கு வீட்டு வேலையில் ஒத்தாசை புரியும் ஒரு பெண்மணிக்கு ஒரு மனக்குறை. இவரின் கணவனும் இரு மகன்மாரும் அடிக்கடி வேலைக்குச் செல்லாமல் தங்கி விடுவதால் இவர்களின் மாதச் சம்பளத்தில் அரைவாசி கூட கிடைப்பதில்லையாம்.
இதனால் குடும்பச் செலவுகளுக்கு இப்பெண்மணி திண்டாட வேண்டியேற்படுகிறது.
தனது இக்கட்டான நிலையை இப்பெண்மணி ஒருநாள் நண்பரின் மனைவிக்கு அழாத குறையாகச் சொல்ல, அவர் தனது கணவனின் கவனத்துக்கு இவ்விடயத்தைக் கொண்டு வந்தார்.
நண்பர் நன்கு யோசித்து விட்டு அப்பெண்மணியை அழைத்து" அடுத்தமாதம் மட்டும் நீர் இங்கு வேலைக்கு வராமல் உமது வீட்டிலேயே தங்கியிரும். ஆனால், சம்பளத்தைத் தருகிறேன். உமது வேலை பறிபோய்விட்டதாக உமது கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் தெரிவித்துவிடும். வீட்டுச் செலவுகளுக்கு அவர்களையே நம்பியிருப்பதாகக் கூறிவிடும்" என்று சொன்னார். இந்த யுக்தியின் பலனாக மூவரும் ஒழுங்காக வேலைக்குச் செல்லத் தொடங்கி விட்டனராம்.
எவரையும் வழிக்குக் கொண்டு வர வழியா இல்லை

-ஒளிவு மறைவின்றி...

Tuesday, February 21, 2006

வெள்ளவத்தை நடைபாதையில் ஒரு மூதாட்டி சில சாமான்களை வாங்கினார்.
எவ்வளவு காசு என்று அவா கேட்க 90 என்றார் வியாபாரி.
100 ரூபா தாள் ஒன்றை மனுசி கொடுத்தது. வாங்கி பார்த்தவருக்கு அதிர்ச்சி.ஏனென்டா அவா கொடுத்தது 100 டொலர் தாள் ஒண்டு..
அந்த வயாபாரி நாணயமானவர். அதை அவாவிடமே திருப்பி கொடுத்து விசயத்தையும் விளங்கப்படுத்தினார்.
வேறு யாராவதாக இருந்திருந்தால்??.....
ஆகவே வெளிநாட்டிலிருந்து பணத்தை கொடுத்து விடுபவர்கள் இவற்றையும் கவனிக்க வேண்டும்...

Sunday, February 19, 2006

பஸ்சில் போய்க்கொண்டு இருந்தபோது நடந்த சம்பவம் ஒண்டு.
வகுப்பு முடிந்து வந்த பல பெண்பிள்ளையள் அடுத்த தரிப்பில் ஏறினார்கள்.
அவர்களோடு ஒரு மைனர் குஞ்சு ஒருத்தரும் ஏறினார்.
கையில செல்போன், கழுத்தில இரட்டை சங்கிலி,நீட்டு முடி, சேட்டில கூலிங் கிளாஸ் மாட்டி கொண்டு நிக்கிறார்.
நிண்ட பிள்ளையள எல்லாம் திரும்பி திரும்பி பார்த்தார். அவையள் யாரும் அவரை கணக்கில எடுக்காமல் நிக்கினம்.
இருக்க இடமில்லாமல் நிண்டு கொண்டு வந்த பிள்ளையளுக்கு முன்னால போய் நிண்டவர் தன்ர செல்போன எடுத்து நம்பர் டயல் பண்ணினார். காதுக்க வச்சு கதைக்க வெளிக்கிட்டார்.''ஹலோ, மச்சான் நான் பஸ்சில வந்து கொண்டு இருக்கிறன். கார் பிரேக் டவுண் ஆகிட்டுது......''அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவரின்ட செல்போன் றிங் பண்ண தொடங்கியது.

(அவர் கோல் பண்ணி கதைத்துக்கொண்டு இருக்கும் போதே அவரின்ட போனுக்கு கோல் வருது.அது றிங்கும் பண்ணுது அப்பிடி ஒரு செல்போன்!!!!!!! எங்கயாவது கிடைச்சா எனக்கும் சொல்லுங்கோ....)

பஸ்சிற்குள் ஒரே சிரிப்பு.... எல்லோரும் அவரையே பார்க்கினம் சட்டென பதறியவர் அப்படியே வாசலுக்கு ஓடினார். யாரையும் நிமிர்ந்து, திரும்பி பார்க்கிரார் இல்ல. அவரின் கஸ்டகாலம் அடுத்த தரிப்புக்கு இன்னும் கொஞ்ச தூரம் கிடக்கு. பஸ்சுக்குள் சிரிப்பு இன்னும் ஓயவில்லை.
அப்பிடியே தலையை குனிந்து கொண்டு நிண்டவர் பஸ் அடுத்த தரிப்பில் நிப்பாட்ட முதலே குதித்து ஓடிட்டார்.பந்தா காட்ட வெளிக்கிட்டு மூக்கு உடைபட்டதுதான் மிச்சம்.இது தேவையா? எல்லாம் வயசுக்கோளாறு.................ம்ம்ம்ம்ம்ம்.......
அவரை அதுக்கு பிறகு அந்த பஸ்சில் காணேல்ல. பிள்ளையள் இனி தொல்லை இல்லாமல் போய் வருங்கள்.

Friday, February 17, 2006

ACUPUNCTURE

Its history is fascinating; its potential results to all of us are immeasurable….
This type of treatment has been traditional in china for many thousands of years. Acupuncture should be considered as an additional weapon not only in the fight against rheumatic diseases but also in their prevention.


tell me more about ACUPUNCTURE.

Wednesday, February 15, 2006

SCHOOL
S is for Sincerity
C is for Capacity
H is for Honesty
O is for Obedience, the next
O is for Orderliness and
L is for Learning.
So the SCHOOL is for Sincerity,Capacity,Honesty,Obedience,Orderliness and Learnig.
For these things
I came to School
and with these things
I will leave the School
-someone-

Tuesday, February 14, 2006

WAYS TO MANAGE WORK AND STUDY MORE EFFICIENTLY
Before you start on a new job explain to your employer that you are a student and will need extra time off during examinations and flexible working hours.

Try to look for a job that is a first step towards your chosen career path if possible.
For example, it you are studying for a Management or Business Administration Degree, working as a Marketing Representative or a management trainee will complement both your studies as well as your work.

Make sure that your schedule lets you have some time for yourself, to relax and enjoy the things you like the best, such as reading or listening to music.

Try to plan ahead, if you know a busy time is coming on your course or where you work, make a note of upcoming deadlines so you know when the hand in dates for coursework and assignments are. This will help you to keep on top of things and avoid missing those important deadlines. Don’t miss lectures to undertake work. If you miss the classes and submit work late or of poor quality, it will seriously damage your chances of getting a good degree.

Use your earning wisely- put away a part of it into a savings account for future use.

Be realistic about how much work you can fit in to your schedule. If you find yourself unable to cope speak to your boss about fewer work hours, or find a job that will give you more time to study.
Make sure you keep a record of all your activities while working. Valuable skills are gained from your work experience and these need to be recorded on your CV. Future employers will be impressed by how well you have managed your time, while studying and working.

வணக்கம்.
புதிதாக ஆரம்பித்து உள்ளேன்.
விரைவில் பல விடயங்களுடன் சந்திப்போம்.