Google
 
Web google.com

Friday, February 24, 2006

நண்பரின் வீட்டுக்குத் தினசரி வந்து அவரின் மனைவிக்கு வீட்டு வேலையில் ஒத்தாசை புரியும் ஒரு பெண்மணிக்கு ஒரு மனக்குறை. இவரின் கணவனும் இரு மகன்மாரும் அடிக்கடி வேலைக்குச் செல்லாமல் தங்கி விடுவதால் இவர்களின் மாதச் சம்பளத்தில் அரைவாசி கூட கிடைப்பதில்லையாம்.
இதனால் குடும்பச் செலவுகளுக்கு இப்பெண்மணி திண்டாட வேண்டியேற்படுகிறது.
தனது இக்கட்டான நிலையை இப்பெண்மணி ஒருநாள் நண்பரின் மனைவிக்கு அழாத குறையாகச் சொல்ல, அவர் தனது கணவனின் கவனத்துக்கு இவ்விடயத்தைக் கொண்டு வந்தார்.
நண்பர் நன்கு யோசித்து விட்டு அப்பெண்மணியை அழைத்து" அடுத்தமாதம் மட்டும் நீர் இங்கு வேலைக்கு வராமல் உமது வீட்டிலேயே தங்கியிரும். ஆனால், சம்பளத்தைத் தருகிறேன். உமது வேலை பறிபோய்விட்டதாக உமது கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் தெரிவித்துவிடும். வீட்டுச் செலவுகளுக்கு அவர்களையே நம்பியிருப்பதாகக் கூறிவிடும்" என்று சொன்னார். இந்த யுக்தியின் பலனாக மூவரும் ஒழுங்காக வேலைக்குச் செல்லத் தொடங்கி விட்டனராம்.
எவரையும் வழிக்குக் கொண்டு வர வழியா இல்லை

-ஒளிவு மறைவின்றி...

0 Comments:

Post a Comment

<< Home